பாடசாலைக்கு அருகில் குப்பை கிடங்கு – ஆழ்ந்த உறக்கத்தில் நகர சபை

வல்வெட்டித்துறை நகரசபை குறித்து பல தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளது அதில் குப்பை பிரச்சனை அதிகமாக கிடைத்துள்ளது பிரதான வீதியோரங்களில் ஆங்காங்கே சில விஷமிகளால் குப்பைகள் வீசப்பட்டு அவ்விடம் குப்பை கிடங்காக மாறுவதாக பலர் தெரியப்படுத்தி இருந்தார்கள்.

அதிலும் சிதம்பரக்கல்லுரிக்கு அருகில் பல மாதங்களாக குப்பை போடப்பட்டு அவ்விடம் குப்பைக்கிடங்காக மாறிவரும் அவலம் ஏற்பட்டடுள்ளது.

நகரசபைக்கு இதனை பார்க்க நேரமில்லையா?

அல்லது வீதியின் ஓரங்களை பார்ப்பதில்லையா?

குப்பைகளை பைகளில் அள்ளிக்கொடுத்தால் தான் கொண்டுபோவார்கள் போல?

தற்போது வல்வை அம்மன் ஆலய திருவிழா நடைபெற்றுக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது

நகரசபை தனது கடமைகளையும் பொறுப்புகளையும் மறந்து செயற்படுவதாக தெரிகிறது.

இனி வரும் காலங்களில் ஆவது நல்லவர்களை நகர சபைக்குள் கொண்டுவருவோம் வல்வெட்டித்துறையை முன்னேற்றுவோம்

எமது மின்னஞ்சல் முகவரி – [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *